ஸ்ரீ மஹா சோளியம்மன் திருக்கோவில்

இந்து கொங்கு வெள்ளாள கவுண்டர்-ஆத்தூர் காடை மற்றும் விளையன் குலத்தார்களின் தனிக்கோவில்

எதிர்வரும் விழாக்கள் படத்தொகுப்புகள் நிர்வாகக் குழுவினர் நேரலை(LIVE)

SHREE MAHA SOLIAMMAN TEMPLE

குலதெய்வம்

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. 4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு. 5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை. 6). எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும். 7). குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 8). வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 9). நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 10). குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.11). குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 12). குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

Read more
image01

சேமிப்பு அவசியம்

ஆஸ்திரேலியா அருகே உள்ள குட்டி தீவு நவ்ரு (Nauru). ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் ஐந்து கிமீ, அகலம் மூன்று கிமீ. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு! மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நாட்டுக்கு சனியன் பிடித்தது.. ஆம்... தீவில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் (Phosphate) எனும் கனிமத் தாதுப் பொருளாக மாறியிருந்தன. பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு, வழக்கற்ற அளவில் பாஸ்பேட் இருந்தது. அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன. அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்கு போட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்க முடியும். ஆனால், அந்த பணத்தை என்ன செய்தார்கள்? எல்லாருக்கும் இலவசமாக உணவு, டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கி கொடுத்தார்கள். அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள். ஹவாயி,

Read more
image01

விளக்கேற்றிய வீடு வீண் போகாது...

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ? கேட்கமாட்டீர்கள் ... மதம் மாற்றிவிட்டால்....... வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே மயானம் போல் தோன்றும். எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. .

Read more
image01

எதிர்வரும் விழாக்கள்

 
 

வைகாசி பௌர்ணமி-10-06-2025 மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை பூஜை நடைபெறும்

வைகாசி பௌர்ணமி பூஜை மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும்

-

 
 
 

ஆனி அமாவாசை-25-06-2025 மதியம் 12 மணிக்கு பூஜை நடைபெரும்

மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்

-

 
 
 

ஆனி பௌர்ணமி -10-07-2025 மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை பூஜை நடைபெறும்

ஆனி பௌர்ணமி 04.07.2020 பூஜை மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும்

-

 
 
 

ஆடி அமாவாசை-24-07-2025 மதியம் 12 மணிக்கு பூஜை நடைபெரும்

ஆடி அமாவாசை மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்

-

 
 
 

ஆடி பௌர்ணமி -08-08-2025 மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை பூஜை நடைபெறும்

பூஜை மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும்

-

 

உறுப்பினர்கள் கவனத்திற்கு

வைகாசி அமாவாசை 26.05.2025

வைகாசி அமாவாசை அன்னதானம் வழங்க விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள் தெடர்புக்கு: 9791522299,9489250960

வரி மற்றும் நன்கொடைகளை திருக்கோவில் அலுவலகத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்